Pilavu | Tamil Story | Uncredited Bloggers
டாக்டர் ஆதித்ய நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்காந்து நோயாளியின் report படித்துக்கொண்டு இருக்கிறார்.அப்பொழுது ஸ்ரீ kerchief ல கைய தொடைத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் வருகிறான்.
Dr. ஆதித்ய, வாங்க Mr. ஸ்ரீ உங்களுக்காக தான் இவளோ நேரம் காத்துகிட்டு இருக்கன் வாங்க
ஸ்ரீ கொஞ்சம் தயங்கி தயங்கி அறைக்குள் வருகிறான்
Dr. ஆதித்ய, பயப்படமா வங்க வந்து உட்காருங்க
ஸ்ரீ அங்க இருக்க நாற்காலி ல உட்காந்துட்டான்
காதவுகிட்ட இருந்து ஒரு பையன், Excuse me Doctor! னு கூப்பிடுகிறான்
Dr. ஆதித்ய, Yes, Come in.
அந்த பையன் கைல ஒரு நோட் அப்றம் ஒரு கடிதம் எடுத்துட்டு வரான். ஸ்ரீ கொஞ்சம் குழப்பமா பார்க்கிறான்.
Dr. ஆதித்ய, யாரு நீங்க?
விக்ரம், நான் விக்ரம். நான் ஒரு கதைஆசிரியர் எனக்கு Multiple personality Disorder பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகனும் அதுக்காக தன் Dr. வாசு சார் கிட்ட கேட்டு இருந்தேன் அவருத்தான் உங்களை பார்க்க சொன்னாரு இந்தாங்க சார் .(கடிதத்தை Dr. ஆதித்ய கிட்ட விக்ரம் குடுக்கரன்)
Dr. ஆதித்ய , சரி, சரியான நேரத்துக்கு தான் வந்து இருக்கீங்க. Okay, இவரு தான் Mr. ஸ்ரீ , Mr. ஸ்ரீ இவரு விக்ரம்.
விக்ரம் ஸ்ரீ கிட்ட Hai சொல்லிட்டு கை கொடுக்கிறான் ஆன ஸ்ரீ கை கொடுக்கல Hai மட்டும் சொல்லிட்டு டாக்டரை கோபத்துடன் பார்க்கிறான்.
Dr. ஆதித்ய, ஒன்னும் இல்ல ஸ்ரீ நம்ம session க்கு போலாமா.
விக்ரம் குழப்பமா பார்க்கிறான்
விக்ரம், சார் இவரு யாரு?
Dr. ஆதித்ய, அட சொல்லாமறந்துடன் ல நீங்க Multiple Personality Disorder பத்தி கேட்டீங்க ல
விக்ரம், ஆமா டாக்டர்
Dr. ஆதித்ய , இவருக்கு தான் அந்த disorder இருக்கு.
ஸ்ரீ, டாக்டர் அப்டி சொல்லாதீங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை
Dr. ஆதித்ய, ஆமா ஆமா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . நீங்க கவலைப்படத்திங்க . (டாக்டர் கிண்டல் செய்கிறார்)
ஸ்ரீ மிகவும் கோவத்துடன் டாக்டர்….
Dr. ஆதித்ய, சரி சரி கோவப்படத்திங்க
விக்ரம் மெதுவா அங்க என்ன நடக்குதோ அதை எல்லாம் அவனோட நோட் ல எழுதுறான்.
Dr. ஆதித்ய பொறுமையா ஸ்ரீ கிட்ட பேச ஆரம்பித்தார்
Dr. ஆதித்ய, last session க்கு அப்புறம் என்னலாம் நடந்துச்சு எப்படி feel பன்றிங்க?
ஸ்ரீ, போலி புன்னகையுடன் fine டாக்டர் எல்லாம் நல்லாவே போகுது
Dr. ஆதித்ய, நல்லா இருக்குன எப்படி சொல்றிங்க
ஸ்ரீ பல்லை கடிக்கிறான் ரொம்பவும் கோவப்படுறான்
Dr. ஆதித்ய, சொல்லுங்க……
விக்ரம் ஸ்ரீ யவே பார்க்கிறான்
ஸ்ரீ, எந்த பிரச்சனையும் வரல டாக்டர் நல்லா இருந்தன்
Dr. ஆதித்ய, சரி விக்ரம் இப்ப நீங்க கேளுங்க அவரை
விக்ரம் தைரியமா கேக்கிறான்
விக்ரம், அப்போ உங்களுக்குள்ள இப்போ ஒரு personality மட்டும் தான் இருக்கு னு சொல்றிங்களா?
ஸ்ரீ, ரொம்ப கோவப்பட்டு டாக்டரை பார்த்து
இதோட நிரத்திகலாம் னு கத்திட்டான்
விக்ரம் ரொம்பவே பயந்துட்டான்
டாக்டர் அமைதியா ஸ்ரீ யவே பாத்துட்டு இருக்காரு
ஸ்ரீ விக்ரமை பார்த்து நீ இப்போ வெளிய போட னு கொஞ்சம் சத்தமா சொல்றான்
விக்ரம் notes லாம் எடுத்துக்கிட்டு வெளிய போகலாம் னு பக்கறான்
Dr. ஆதித்ய, Don’t worry விக்ரம் நீ இங்க இரு நான் அவரை பாதுகாரன்
ஸ்ரீ எழுந்து வந்து டாக்டரை அடிச்சிறான் அப்போ தடுக்க போன விக்ரமையும் அடிச்சிட்டான் அங்க chair ல உட்காந்து இருந்த டாக்டர் கீழ விழுந்துட்டாரு அந்த சத்தம் அங்க இருக்க எல்லாருக்கும் கேட்டுருச்சு. Dr. ஆதித்ய க்கு மூக்குல இருந்து ரத்தம் வருது விக்ரம் கீழ விழுந்து இருக்கான்
சத்தம் கேட்டு Dr. வாசு இங்க ரூம் கு வரார். வாசு, ஸ்ரீ ய பார்த்து என்ன ஆச்சு டாக்டர்? னு கேக்குறார்
விக்ரம்க்கு இப்பதான் தெரியுது ஸ்ரீ தான் உண்மையான டாக்டர் ஆதித்ய தான் உண்மையான நோயாளி னு.
டாக்டர் வாசு ஸ்ரீ ய பார்த்து , எந்த பிரச்சனையும் இல்லை ல டாக்டர் னு கேக்குறார்
ஸ்ரீ, No டாக்டர் I’ll manage it.
ஆதித்ய பொறுமையா மறுபடியும் அந்த chair ல உட்காந்து
“வாங்க சார் உங்களுக்கு என்ன problem” னு கேக்குறான்.
0 Comments