அந்த நாள் | Episode 3 | Tamil Short Stories | Uncredited Bloggers
Written By:
Varshini.B
அந்த நாள்
என்னை அறியாம என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது..
ஆயிரம் இடி மனதில் விழுந்தது போல் பாரம்... என் வாழ்வின் முதல் இடி...
கத்தி அழுகவும் முடியாமல்... அழுகையை நிருத்தவும் முடியாமல் ...தினரி கொன்டிருந்தேன்..
ஏன்.அவன் அப்படி சொல்லனும்..
நானா அவன்கிட்ட பேசுன..
அவன்தா வந்து பேசுனான்...
நானா அவன மீட் பன்னலாம்னு கேட்டேன்.. அவன்தா வந்து சொன்னா..
எதுக்கு மீட் பன்னலாம்னு சொல்லிட்டு அப்றோ வேணாம்ணு சொல்லனும்....
விடு மதி எதுக்கு அழுகற...
அவன் யாரு..யாருகோகாக நீ எதுக்கு அழுகற...என்று என் மனம் சமாதானம் படுத்தினாலும் என்னால்அழுகாமல் இருக்க முடியவில்லை.....
நாட்கள் ஓடின..
நா அவன கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தேன்...
சந்தோஷமா இருந்தேன். ..
டன் டன் டடா...என் போன் அடித்தது...
ஜீவா.. என்று வந்தது..
எனக்குள் கோவத்துடன் கழந்த அதிர்ச்சி...
இவன் எதுக்கு போன் பன்னனும்..என்று நினைத்தேன்...
போனை எடுகனுமே என்று அட்டன் பன்னுனேன்..
ஹலோ... நா ஜீவா..
தெரியும் சொல்லுங்க...
சாரி....
எதுக்கு..?
அன்னைக்கு நா அப்படி சொல்லிருந்திருக்க கூடாது..
பரவாயில்லை...
நீ எதாச்சு தப்பா நினசுடியா..அத பத்தி நினைக்காத...
நா அத அன்னைக்கே மறந்துட்டேன்...தேவயில்லாத விசயத்தை நா எதுக்கு நியாபகம் வெக்கனும்....அப்பவே நா மறந்துட்டேன்...நீங்க கவலபடாதீங்க....என்றேன்
ஏன் இப்படி பேசற...
நா நல்லாதா பேசறேன்....
நீங்க உனிமேல் பேசும் போது நல்லா யோசித்து பேசுங்க...நீங்க சாதாரணமா சொல்லிட்டு போய்ருவிங்க ..ஆனா கஷ்டபடுரது நாங்கதா...உனிமேல் ஆச்சு நல்லா யோசித்து பேசுங்க...
ம்ம்..கண்டிப்பா...நா நல்லா யோசிச்சுட்டேன் நம்ம நண்பர்களாக இருக்கலாம்....
என்ன இவன் இப்படிசொல்றான்...சரி நண்பர்கள் தான ...ஓ.கே...என்றேன்....
அன்று முதல் நாங்கள் நல்லா பேச ஆரம்பித்தோம்...
பல விசயங்கள் பேசினோம்...
ஏனோ அவனிடம் பேசும் போது மட்டும் இயல்பாக என்னால் பேச முடியவில்லை...
அத அவனிடம் சொல்லலாமா ...என்று நினைத்தால் என்னால் சொல்லவும் முடியவில்லை....
இப்படியே நாட்கள் ஓடின....
ஒரு நாள்..
எனக்கு போர் அடிக்குது...எதாவது விளையாடலாமா என்றேன்...
சரி சொல்லு என்றான்...
நா உங்க கேரக்டர ஜட்ஜ் பன்றேன்...
ம்ம் சரி சொல்லு..என்றான்......
இதுதா சாக்கு மதி அவன அசத்தீரனும்..என்று நினைத்துக்கொண்டு ஆரம்பித்தேன்...
நீங்க உங்க வாழ்க்கைய ஜாலியா என்ஜாய் பன்னனும் எஸ்பஸலி வித் கேல்ஸ்...நீங்க ஆர்வத்தில எதாவது செஞ்ஞிருவீங்க பட் அத பத்தி அப்ரம்தா கவலபடுவீங்க ...என்றேன்
தப்பு... நா பெண்கள ரொம்ப மதிப்பேன்....
எனக்கு தெரியும்...சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...
ஓ ...சரி..என்றான்... பிறகு எதுவும் பேசவில்லை...
சாரி...உனிமேல் என் கூட பேசுவிங்கலா...என்றேன்
பேசி.... என்னபன்றது ..
பாய்.....என்று சொல்லி என்னை தேடி வந்தவன் இன்று என்னை விட்டு சொன்றுவிட்டான்...
நா தெரியாமதா சொன்னேன்...விளையாட்டுக்குத்தா சொன்னேன்...
ஆனா இப்படி நடக்கும்னு நா எதிர்பார்கல...
அவனை நினைத்துக்கொண்டும்..அந்த நாள் நான் செய்த தவறைப்பற்றியும் கவலைபட்டுக்கொண்டே நாட்கள் ஓடின....
ஒருநாள்....
நண்பர்கள் மூலம் அவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள ராங் கால் மூலம் அவனிடம் பேசினர் என் நண்பர்கள்..
ஹலோ.. யாரு ..என்றான்...
நா உங்க லவ்வர்..
எனக்கு லவ்வர் இல்ல..யாருனு சொல்லுங்க...
டிரூகாலர்ல பாருங்க..
என்னங்க பைதியகாரி கிருகீனு இருக்கு...என்றான் அப்பாவியாக..
அப்ப நீ என்னய பைத்தியம்னு சொல்றயா..
ஏங்க அதுல அப்படி தா இருக்கு...
நாங்கள் போனை கட் பன்னி விட்டோம்...
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை..
எவ்வளவு அழகா பேசினான்...செம கியூட்...
இவ்வாறு அவனின் நினைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தேன்...
போக போக அவனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவும் ஆரம்பித்தேன்...
ஒருநாள் ....
அந்நி மாலை..
எனக்கு மனம் சரியில்லாத காரணத்தினால் நான் கொஞ்சம் தனியாக நடந்து கொண்டிருந்தேன்...
அந்த தனிமையான சூழல்...காற்றும் என்னை தீண்டாமல் என்னை தனிமையாக்கியது...
அப்பொழுது...
அப்பொழுது..
யாரோ என்னை தொடுவது போல் இருந்தது...
திரும்பி பார்த்தேன்.....
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை..
என் உதடுகள் எதோ ஒரு பெயரை உழருகிறது.....
அது.. அது.. ஜீவா.....
யாரால் இன்று நான் இப்படி இருக்கிறனோ அவன் ....
யாரை நான் என் வாழ்வில் மறக்க வேண்டும் என்று நினைத்தனோ அவன்....
மீண்டும் என் வாழ்வில் இவன் எதற்கு வந்தான்...
மீண்டும் என் வாழ்வை ஏமாற்ற வந்தானா....
நான் அவனை பாத்தவுடனே சற்று தள்ளி நின்றேன்...
இங்க பாரு மதி..என்று அருகில் வந்தான்..
நான் அவனை விட்டு விலகி சென்றேன்..
அவன் மீண்டும் மீண்டும் என் அருகில் வந்தான்...
இப்ப உனக்கு என்ன வேண்டும்...
எதற்கு என்னை தேடி வந்தாய்...
மீண்டும் என் வாழ்வை ஏமாற்ற வந்தாயா...
நா செஞ்சது தப்பு தா மா...
அதற்காக நா மிகவும் அவதி பட்டுட்டேன்...
என்ன மண்ணிசிரு தங்கம்...
என் செல்லகுட்டி ல மாமன பாருடி...
என்று என்னை இழுத்து அவன் அருகில் கொண்டு வந்தான்..
அவன் மூச்சுக் காற்று என் நெற்றியில் வீசியது..இன்னும் என் அருகில் வந்தான்...
அவனின் இதமான விரல்கள் என் கைகளை தழுவின...
அங்கு எங்களை தவிர வேரு யாரும் இல்லை...
கதிரவனும் எங்களை டிஸ்டப் பன்னாம போய்விட்டது...
சில்லென காற்று எங்கள் பக்கம் இதமாக வீசியது...
அவன் என் கன்னத்தை தொட்டு.. இங்க பாருடி....என் வாழ்க்கையில நிறையா தப்பு நடந்திருக்கு ...அதுல உன்னைய பார்த்தது ஒரு முக்கியமான தப்பு...... உன்னைய பாக்காம இருந்திருந்தா கூட நல்லா இருந்திருந்திருப்பேன்...ஆனா உன்ன பாத்தனாள தா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் .....உன்னைய விட்டு நா போனதுக்கு காரணம் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்னதா டி....
என் வாழ்க்கையில நா தப்பு பன்னாம இருக்கவும்... என் தப்பயெல்லாம் சரி பன்னி என்னைய குட் பாய்யா ஆக்க நீ வருவயா.....என்று என் கைகளில் முத்தமிட்டான்...
அவன் சொல்லும்போதே எனக்கு அழுக வந்திருச்சு...
அவன் அருகே சென்று....நீ பேட் பாயாவே இரு ஆனா எனக்கு மட்டும்... என்று அவனை செல்லமாக அடித்து விட்டு ஓடினேன்....அவனும் என்னை துறத்தினான்...
திடீரென என் கையை பிடித்து இழுத்து தூக்கிவிட்டான்...நான் வெட்கத்தில் நழைந்தேன்......எங்கள் செயல்களை இரண்டு குருவிகளும் ரசித்தன....
0 Comments