அந்த நாள் | Tamil Short Stories | Uncredited Bloggers
Written By Varshini.B
இன்று என் தூரத்து உறவினர் திருமணம்,எனக்கு போக புடிக்கவில்லை என்றாலும்.என் அம்மா போக சொன்னதால் செல்கிறேன்....வீட்டில் இருந்திருத்தால் கூட டிவி பார்த்து கொண்டே தூங்கலாம் ..அங்கு எனக்கு யாரையும் தெரியாது..என்ன செய்ய போகிறேனோ........
மதி ..மதி...அம்மா அழைத்தாள்... இருமா... என்று என் உடைகளை நான் சரிப்பார்த்தேன்....
மஞ்சள் நிற சல்வார்,அதற்கு தகுந்தவாறு வாட்ச்..தலை போனி.....மொபைலை பார்த்துக்கொண்டே
கீழே சென்றேன்...
அம்மாவும் எனக்கு மேட்ச் மஞ்சள் நிற புடவை அணிந்திருந்தாள்.....அப்பா வரவில்லை.இருவரும் சென்றோம்....
எனக்கு போகவே புடிக்கவில்லை....அங்கு எனக்கு யாரையும் தெரியாது...
போர் தான் அடிக்கும்...
மண்டபத்தை அடைந்தோம்...மிக பெரிய மண்டபம்...
அந்த நிலவின் ஒளியில் மண்டபம் இன்னும் அழகாய் இருந்தது.
உள்ளே சென்றேன் என் தங்கை வந்தாள்... எனக்கு அவள் தூரத்து சொந்தம்...எனக்கு கிடைத்த கம்பெனி அவள்தான்.....நானும் அவளும் மண்டபத்தை சுற்ற ஆரம்பித்தோம்...
ஏதாவது அழகான பையன் இருந்தா பாரு டி..... என்றேன்
அந்த மண்டபத்தில் என்கண்களுக்கு ஒரு அழகான பையன் கூட தென்படவில்லை...
என்ன டி.. ஒரு பையன் கூட அழகா இல்ல...போர் அடிக்குது டி.. என்று மொபைலை பார்த்துக்கொண்டே சென்றேன்.. அப்பொழுது....
வெள்ளை நிற ஷர்ட்...பிளாக் ஜீன்....
கைகளால் தலையை கோதிகொண்டே
என் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான்,என் மனதினுள் ஒரு பரவசம் ..
யாரு
அவன்....
இவனை
பார்த்ததும் இல்லை ..பேசியதும் இல்லை..ஆனால் ஏன் என் மனதினுள் இப்படி ஒரு ஆனந்தம் ..
அவன் கிட்ட போய் பேசலாமா வேண்டாமா..
யார்
என்று தெரியவில்லை..எப்படி பேசறது..
பேசணும் போலவும் இருக்கின்றது...
பேசினால் எதாவது நினைத்தாள் என்ன செய்வது.....
என் அருகே வந்தான்..
ஐயோ!என்ன அழகு....அவ்வுளவு அழகு..
பேசு மதி...பேசு...என் மனது என்னை விட அவதிப்படுகிறது..
என் வாயிலிருந்து வார்த்தை வருவதட்குள் அவன் சென்றுவிட்டான்..
செ!வட போச்சே!..
எப்படியும் இங்க தான இருப்பான் பாத்துக்கலாம் ...
நான்
வழக்கம்போல் மண்டபத்தை சுற்ற ஆரம்பித்தேன்...
மதி...மதி....அம்மா அழைத்தாள்..
வந்துட்டேன் ...
அங்கு யாருக்கோ என்னை அறிமுகம் படுத்தினால்...
யாரு டா அது! எரிச்சலுடன் சென்றேன்...
நான்
எதிர்பார்த்தது போல் அவன் தான்..
என்னா
அழகு..
என் கண்கள் கூட அவனின் அழகை பார்த்து சிமிட்ட மறந்துவிட்டது..
மதி..இவன் ஜீவா..உன் கசின்...
ஹாய்!
ஐ யம் மதி!
வாங்க..என்று அவனையும் அழைத்துக்கொண்டு என் தங்கையிடம் சென்றேன்..
அவனும் அவன் தங்கையுடன் வந்திருந்தான்..
அனைவரும் ஒன்றாக அமர்ந்தோம்....
நானும் அவனும் எதிரெதிரே....
எதாவது விளையாடலாமா... என்றேன்
என்ன
விளையாடலாம்...
டேர்
சொல்லி விளையாடலாம்....என்றேன்
அனைவரும் ஒத்துக்கொண்டனர்..
முதல்ல நீங்க சொல்லுங்க என்றேன் அவனிடம்..
சரி சொல்லு என்றான்...
அவன்
என்னோடு பேசினான்..
என்ன
ஒரு ஆனந்தம் மனதினுள்...
அவனிடம் போய் பேசலாமா என்று பயந்து கொண்டிருக்கும் போது.. அவனே வந்து பேசினான்..
பரிட்சையில் பெயில் ஆவோம் என்று நினைத்து கொண்டிருக்கும் போது 100 கு 100 வாங்கினால் கூட அவ்வுளவு சந்தோசம் வந்து இருக்காது ..
அவன்
பேசியதும் அவ்வுளவு சந்தோஷம்...
நீங்க
எல்லாருக்கும் ஒரு பாடல் சொல்ல வேண்டும் என்றேன்..
நீங்க
எங்க படிக்கறீங்க..என்றான்
நான்
அண்ணா யூனிவெர்சிட்டில படிக்கிறேன் ..
நானும் அங்கு தான் படிச்சேன்
.என்றான்
அடடா!
ஒரு நான்கு வருடத்துக்கு முன்னாடி நான் பிறந்து இருந்தால் நானும் அவனோடு படித்து இருக்கலாம்....
சற்று
நேரம் விளையான்டோம்...பிறகு சாப்பிட சென்றோம்..
சிறுது நேரம் களித்து அவன் வீட்டிட்கு சென்றுவிட்டான்..
மதி..என்னடா அம்மா கூப்பிட இல்லயே என்று நினைத்தேன்...
கூப்பிட்டுவிட்டாள்..
அம்மா!
வந்துட்டேன்...
கொஞ்ச
நேரம் இருந்துவிட்டு சென்றோம்...
மறு நாள் முகூர்த்தம்..
அவன்
வருவான் என்று நினைத்து ஆசையாய் சென்றறேன்.
நினைத்த மாதிரி அவன் அங்கே..சாமி! கொண்னுட்டான்..அவ்ளோ அழகு ...
வழக்கம் போல் ஓரு ஹாய்! சொல்லிவிட்டு அமர்ந்தேன்..
என் நேரம் என்று நினைக்கறேன்..அம்மா நேரம் ஆனதால் வீட்டுக்கு செல்வோம் என்றுவிட்டாள்..
நான் செல்கிறேன் ..உங்க நம்பர் சேவ் பண்ணிக்கிறேன் ..என்று கூறிவிட்டு சென்றேன்..
நான்
சென்றாலும் என் மனம் முழுவதும் அவனின் நினைப்பில்தான் இருந்தது....
அவனை
விட்டு வந்ததிலிருந்து என் மனம் அவனை பற்றியே நினைத்து நினைத்து தவித்தது..
என் அறியாமையால் அவனின் நம்பரை துழைத்துவிட்டேன்..
என் உறவினர் பெண்ணிடம் கேட்கலாமா....வேண்டாம்.. கேட்டால் அவமானம் ஆய்ரும்.. ஆனாலும் கேட்கலாம் என்று நினைத்தேன்..
அப்பொழுது...
0 Comments